27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழில் காணிச் சர்ச்சை: இளம் பெண் சட்டத்தரணியை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை!

யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணி மோசடி விவகாரத்தில், இளம் பெண் சட்டத்தரணியை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் இடைக்கால தடைவிதித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ச்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஸ்ரனிஸ்லாஸ்‌ செலஸ்ரின்‌, நிலுவையில் உள்ள காணி மோசடி வழக்கு ஒன்று தொடர்பில், யாழ் மாவட்ட மேலதிக நீதிவான் நளனி சுபாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்.

அந்தக்‌ கடிதம்‌ அமைச்சர்கள்‌ விஜயதாஸ ராஜபக்ஷ, டக்ளஸ்‌ தேவானந்தா மற்றும்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌ ஐனாதிபதி
சட்டத்தரணி எம்‌.ஏ.சுமந்திரன்‌ ஆகியோருக்கும்‌ பிரதியிடப்பட்டமை
விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக்‌ கடிதம்‌ யாழ்ப்பாணம்‌ மாவட்ட சட்டத்தரணிகள்‌ சங்கத்தினுடையது அல்ல என்று அதன்‌ தலைவர்‌ விளக்கக்‌ கடிதம்‌ ஒன்றை நீதிச்‌ சேவை ஆணைக்‌குழுவின்‌ செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்‌.

மோசடியாகத்‌ தயாறிக்கப்பட்ட அற்றோனித்‌ தத்துவ பத்திரம்‌ ஒன்று தொடர்பில்‌ சட்டத்தரணி எஸ்‌.செலஸ்‌ரின்‌ அண்மையில்‌ யாழ்ப்பாணம்‌ பொலிஸாரினால்‌ விசாரணைக்கு உட்படுத்தப்‌பட்டார்‌. அந்தப்‌ பத்திரம்‌ தனது எழுதுநரான யுவதியால் தயாரிக்கப்பட்டது என்றும்‌ தன்னிடம்‌ ஏமாற்றி கையொப்பம்‌ பெறப்‌பட்டுள்ளதாகவும்‌ அவர்‌ பொலிஸாருக்கு வாக்குமூலம்‌ வழங்கியிருந்தார்‌.

பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரின் அற்றோனித்‌ தத்துவ பத்திரம்‌ ஒன்று தொடர்பான விசாரணை இது. இந்த அற்றோனித்தத்துவத்தை மற்றொருவர் பதிவுக்காக கொடுத்த பின்னர், பெற்றுக்கொள்வதற்காக சென்ற அல்லது அனுப்பி வைக்கப்பட்ட, செலஸ்‌ரினின் எழுதுநரான யுவதியே கைது செய்யப்பட்டார்.

செலஸ்ரினின் வாக்குமூலத்துக்கு அமைய, அவரது எழுதுனரான யுவதி கைது செய்யப்பட்டு, ஜூன் 24ஆம் திகதி யாழ் மாவட்ட மேலதிக நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் அளவில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காணி உறுதிப்பத்திரத்தை தயாரித்தவர் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் பெண் சட்டத்தரணியொருவர், அவரும் மோசடியில் சம்பந்தப்பட்டவர், அவரை கைது செய்ய வேண்டுமென பொலிசார் யாழ் மேலதிக நீதிவானிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இளம் பெண் சட்டத்தரணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகினார்.

யாழ் மாநகரசபை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் முறைப்படியான ஆவணங்களை பெற்றே பெண் சட்டத்தரணி ஆவணங்களை தயார் செய்திருந்தார், ஆவணங்களில் மோசடி இடம்பெற்றிருந்தால் அது தொர்புடைய நிறுவனம் சார்ந்தது, சட்டத்தரணியின் தவறல்ல என கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், இளம் பெண் சட்டத்தரணக்கு முன் பிணையும் கோரினார்.

சட்டத்தரணிக்கு முன் பிணை வழங்குவதற்கு பொலிசார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

பொலிசாரின் ஆட்சேபனைக்கு எதிர் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை பெண் சட்டத்தரணியை கைது செய்யவும் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment