25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
சினிமா

விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்: ‘சந்திரமுகி 2’ உடன் மோதும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளன்று பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment