எரிவாயு விலை குறைப்புக்கு நிகரான கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை நாளை (5) முதல் குறைக்கப்படும் எனவும், அவற்றின் விலை குறைப்பு வீதம் மக்கள் உணரக்கூடிய ஒரு விகிதத்தில் இருக்க வேண்டும் எனவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொத்து மற்றும் உணவுப் பொதியின் விலை குறைப்பு சதவீதம் நாளை காலை அறிவிக்கப்படும் என தெரிவித்த அசேல சம்பத், காஸ் விலை குறைக்கப்பட்டதன் பயனை மக்கள் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உணவுப்பொதி மற்றும் கொத்தின் விலை குறைக்கப்படுவதாக சில முறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளிலும்- பொருளாதார நெருக்கடி உச்சமடைந்திருந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தற்போதும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1