எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ‘இந்தியன் 2’ படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பிரபாஸ் நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல். இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள ‘KH233’ படத்தை எச்.வினோத் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் கமல் இணையும் ‘KH234’ படம் தொடங்க உள்ளது. அஜித்தின் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு இயக்குநர் எச்.வினோத் கமலுடன் இணைகிறார். அரசியல் மையப்படுத்திய கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023