27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

“வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் ஆரம்பம்… கட்சியைக் கட்டியெழுப்புவேன்”: சரத் பவார் சூளுரை!

“வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போராட்டம் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கும். நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்” என்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், குரு பூர்ணிமாவை முன்னிட்டு மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டத்தின் காரத் பகுதியில் உள்ள மாநிலத்தின் முதல் முதல்வரும், தனது வழிகாட்டியுமான யஷ்வந்த் ராவ் சாவனின் நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தனது ஆதராவாளர்களிடம் சரத் பவார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இன்று மகராஷ்டிராவில், நாட்டில் சில குழுக்களால் சாதி மற்றும் மதத்தின் பெயரால் சமூகத்தில் கலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கிளர்ச்சியாளர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள், அதற்கு காலக்கெடு உள்ளது.

நாங்கள் உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் மகாராஷ்டிர மக்களுக்கு சேவை செய்தோம். ஆனால், சிலரால் எங்களின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதுவே நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பாஜக அழிக்க நினைக்கிறது. சமூகத்தில் அச்சத்தினை ஏற்படுத்துகிறது.

தேசியவாத காங்கிரஸை உடைக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் உண்மையான இடம் எது என்பதை நாங்கள் காண்பிப்போம். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கதான் செய்யும். என்சிபியை மீண்டும் கட்டி எழுப்புவேன்”என்று அவர் தெரிவித்தார்.

பலத்தை நிரூப்பித்த பவார்: புனேவில் இருந்து காரத்துக்கு திங்கள்கிழமை காலையில் சரத் பவார் கிளம்பினார். வழியெங்கும் அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். காரத்தில் சரத் பவாரை உள்ளூர் எம்எல்ஏ பாலாசாகேப் பாடீலும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வரவேற்றனர். பதவி ஏற்பதற்கு முன்பாக அஜித் பவாருடன் அவரின் வீட்டில் இருந்த எம்எல்ஏ மகராந்த் பாடீல் ஆகியோரும் சரத் பவாரை வரேவேற்றனர். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பிரித்வி சவானும் சரத் பவாருடன் இருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment