ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இராசபுத்திரன் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் சென்றபோது, ஒரு தமிழ் சகோதரர் கேள்வியெழுப்பியிருந்தார். இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பொறுப்புக்கூறல் பற்றி கேள்வியெழுப்பியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கு பதில் கூற விருப்பமில்லை. அவர், ஆங்கிலம் தெரியாதது ஏதோ பெரிய பிழையென்பதை போல, ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் கேளுங்கள் என்றார்.
அந்த சகோதரர் ஆங்கிலம் தெரியாவிட்டால், பிரெஞ்சில் சரளமாக பேசக்கூடியவராக இருக்கலாம். ரணில் அமைச்சராக இருந்த போது, 1983 கலவரத்தில் அவர் நாட்டை விட்டு விரட்டப்பட்டிருக்கலாம் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1