26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பயணிகள் பேருந்து நடுவீதியில் தீக்கிரையானது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளிய கரிகெட்ட பகுதியில் இன்று (30) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஈஸ்வரன் பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்தப் பேருந்து கடந்த 29ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பேருந்தில் தீப்பிடித்த போது, ​​பேருந்தில் 40 இற்கும் அதிக பயணிகள் இருந்ததாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பேருந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து தீப்பிடித்ததில் ஒரு சில பயணிகளின் பொதிகள் மட்டுமே எரிந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்திற்கு முன்னர் புத்தளத்தை அண்மித்த பகுதியில் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக பஸ் வண்டியை நிறுத்திய போது சாரதி பேருந்தை சோதனையிட்ட போதும் விபத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

பேருந்து தீப்பிடித்ததையடுத்து, புத்தளம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பாலாவி விமானப்படை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஹுங்கல நகரில் துப்பாக்கிச்சூடு

east tamil

அரிசி இறக்குமதி அனுமதிக்காலம் நாளையுடன் நிறைவு

east tamil

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

east tamil

4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை: 51ஆவது ஆண்டு நினைவு நாளை

east tamil

மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

east tamil

Leave a Comment