ரிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட
பெறுமதிவாய்ந்த முதிரைக் குற்றிகள் பளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் முதிரை குற்றிகள் கடத்தப்படுவதாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கமைவாக பளை நகரில் சோதனை மேற்கொண்ட பொலிசார் குறித்த ரிப்பர் வாகனத்திலிருந்து முதிரை குற்றிகளை மீட்டதுடன் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 28 முதிரை குற்றிகளும் ரூ.5 இலட்சம் பெறுமதியானது என பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1