ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரான்சில் நடத்திய சந்திப்பின் போது, தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்வி புரியவில்லையென்றும், அவரை தமிழில் கேள்வியெழுப்புமாறும், தனக்கு தமிழ் தெரியுமென்றும் குறிப்பிட்டார்.
பிரான்ஸில் இடம்பெற்ற சநடதிப்பொன்றின் போது, தமிழர் ஒருவர் சற்று நீண்டதாக சில விடயங்களை ஜனாதிபதிக்கு சொல்ல முயன்றார். இலங்கையில் நடந்த இனப்படுகொலை விவகாரத்திலேயே முதல் நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இலங்கையில் அரசாங்கம் ஜனநாயகமானது என்று தான் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தனது பாணியில், அந்த தமிழர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.
தனக்கு தமிழ் தெரியும் என்றும் ஜனாதிபதி கூறினார்..
ஆர்வலர் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்,
அதற்கு எந்த பதிலும் அளிக்காத ஜனாதிபதி, “இலங்கைக்கு வாங்க“ என்றார்.
இனாதிபதியின் அணுகுமுறையை அவதானித்த போது, அவரது பேச்சை தவிர்க்க விரும்பியதாக தோன்றியது.