சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் விலங்குகளை வேட்டையாடி மோட்டார் சைக்கிள்களில் இறைச்சியை எடுத்துச் சென்ற குழுவொன்று, வனவிஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பியோட முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு வேட்டைக்காரர்கள் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய இந்தக் குழுவில் இருந்த மேலும் இருவர் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏரி காப்புக்காட்டில் விலங்குகளை வேட்டையாட மோட்டார் சைக்கிள்களில் குழுவொன்று பயணிப்பதாக முள்ளிக்குளம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பிரகாரம் நான்கு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மறிச்சிக்கட்டி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வேட்டைக்காரர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தாமல், தப்பியோட முற்பட்ட போது, எவனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் ரிப்பீட்டர் ரக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் தப்பிச் சென்ற இருவர், மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிய வந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.