24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

புடினின் ‘கருணா’வாக மாறிய வோக்னர் குழு: தேசத்துரோகிகள் தண்டிக்கப்படுவார்கள் என புடின் அறிவிப்பு!

வாக்னர் கூலிப்படையின் திடீர் கலகம் “தேசத்துரோகம்“ என்றும், ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய அவசர தொலைக்காட்சி உரையில் இதனை தெரிவித்தார்.

ரஷ்யாவைப் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்வேன் என்றும், வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தனது படைகள் எடுத்ததாகக் கூறிய தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் நிலைமையை உறுதிப்படுத்த “தீர்மான நடவடிக்கை” எடுக்கப்படும் என்றும் புடின் கூறினார்.

இதேவேளை, தலைநகர் மொஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள Voronezh பகுதியும் இந்த வகையான அவசர நிலையை அறிவித்தது.

பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை ரஷ்ய அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும், கைது செய்யவும் அனுமதிக்கிறது .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment