Pagetamil
குற்றம்

வல்வெட்டித்துறையில் ஒரு மாதத்தில் 2வது முறையாகவும் மாயமான 16 வயது சிறுமி: காதலனின் பெற்றோருக்கும் விளக்கமறியல்!

16 வயதான சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று, குடும்பம் நடத்திய 20 வயதான இளைஞனும், அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.

16 வயதான மாணவியொருவர் மாயமானதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சிறுமி கடந்த மாதமும் மாயமாகியிருந்தார். 20 வயதான இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பையடுத்து, அவருடன் சென்றிருந்தார். பின்னர் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரின் பெற்றோரும் வந்து, தமது பிள்ளைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

ஒரு மாதம் கழித்து, மீண்டும் சிறுமி மாயமாகியிருந்தார்.

சில நாட்கள் தலைமறைவாக இருந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க உத்தரவிடப்பட்டதுடன், இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இளைஞனின் வீட்டிலேயே தங்கியிருந்ததாக கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய, இன்று இளைஞனின் தாயும், தந்தையும் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment