கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான ஷேன் வோர்னின் மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். வோர்னின், உடற்கூராய்வின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அவர்கள் இதில் தெரிவித்துள்ளனர்.
இதனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் இதயவியல் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான கிறிஸ் நீல் ஆகியோர் இணைந்து கண்டறிந்துள்ளனர். உடற்கூராய்வு முடிவுகளின் படி வோர்னுக்கு இதய நோய் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் திகதியன்று தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 52 வயதான ஷேன் வோர்ன் மரணமடைந்தார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் வோர்ன் விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றி உள்ளார்.
“சர்வதேச அளவில் விளையாடிய வீரரான ஷேன் வோர்ன், மாரடைப்பால் மரணம் அடைந்தது அசாதாரணமானது. ஆனாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர் கடைபிடிக்கவில்லை. அது நாம் அனைவரும் அறிந்ததே. அதீத உடல் எடை, புகைப்பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். அவரது இதயத்தின் தமனிகளில் லேசான படிமங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. நாங்கள் நோயாளிகளிடம் இது மாதிரியான பாதிப்புகளை பார்த்துள்ளோம். ஆனால், வோர்ன் விஷயத்தில் அவர் கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு தமனியில் பாதிப்பின் நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் அவுஸ்திரேலியா மற்றும் உலக அளவில் உயிரிழப்பு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. தடுப்பூசி சார்ந்த உயிரிழப்புகள் குறித்த விவகாரம் விசாரணை நிலையில் உள்ளது. அதனால் இதன் பயன்பாட்டை உலகளவில் நிறுத்த வேண்டும்” என மருத்துவர்கள் அசீம் மல்ஹோத்ரா மற்றும் கிறிஸ் நீல் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான இதயவியல் மருத்துவர்கள் இந்த கருத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.