25.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 2 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன.

காலாவதியான தாற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.எனவே புதிய பிரிண்ட்கள் உட்பட இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது,” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

17 இந்திய மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment