மேடையில் ‘அசுரன்’, பந்தியில் ‘விடுதலை’: நடிகர் விஜய் நிகழ்ச்சியும், வெற்றிமாறன் படங்களும்

Date:

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில், அசுரன் படத்தின் வசனத்தை விஜய் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் மாணவர்களுக்கான மதிய உணவில் செள செளகூட்டு இடம் பெற்று இருந்தது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை – நீலாங்கரை பகுதியில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இவ்வாறு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வசனத்தை குறிப்பிட்டு விஜய் பேசினார். இது தவிர்த்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், விடுதலை படத்தில் இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்த செள செள காயால் செய்த கூட்டு இடம் பெற்று இருந்தது.

spot_imgspot_img

More like this
Related

Update – மின்விசிறி வயரால் பறிபோன ஒரே குடும்பத்தின் 4 உயிர்கள் – உறக்கத்திலேயே நடந்த சோகம்!

கடுவெல நகரில் இடம்பெற்ற கோரச் சம்பவம் – தாய், தந்தை மற்றும்...

மஸ்கெலியா பாடசாலையில் 35 மாணவர்கள் திடீர் சுகவீனம் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும்...

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்