ஆந்திர ஆளும் கட்சி எம்.பி. மனைவி, மகன் கடத்தல்

Date:

ஆந்திராவில் ஆளும் கட்சி எம்பியின் மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பியாக சத்யநாராயணா உள்ளார். இவர் கடந்த 13 ஆம் திகதி பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆனந்தபூரில் வசித்து வரும் எம்பியின் மகன் சந்துவை சந்திக்க, எம்பியின் மனைவி ஜோதி மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். இதனை அறிந்த ஒரு கும்பல் சந்துவின் வீட்டருகே காந்திருந்தது.

எம்பியின் மனைவி ஜோதி அங்கு வந்ததும், அவரையும், மகன் சந்து, ஆடிட்டர் மற்றும் உறவினர் வெங்கடேஸ்வர ராவ் ஆகிய 4 பேரை அந்த கும்பல் காரில் கடத்தி சென்றது. கடந்த 13ஆம் தேதி முழுவதும் எம்பி சத்யநாராயணாவின் ஆதரவாளர்கள், கடத்தப்பட்டவர்களை பல இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் பிரச்சினையே கடத்தலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்