பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 29 வயதான பாடசாலை ஆசிரியையொருவர் நேற்று (14) மதியம் கொலை செய்துள்ளார்.
மாத்தறை, ஊர்பொக்க டோலமுல்ல, தம்பாவில மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சித்தாரா மதுமாலி என்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேக நபர் பலா மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் 1.45 மணியளவில் பாடசாலை முடிந்ததும், பேருந்தில் பயணித்து, வீட்டிற்கு அருகில் இறங்கி நடந்து சென்றார். ஆள் நடமாட்டமற்ற வீதியோரம் மறைந்திருந்த இளைஞன், அந்த ஆசிரியையின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகவும், பின்னர் கழுத்து, தலையில் சரமாரியாக கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை ஆசிரியை பாடசாலையில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே இந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், பத்து வருடங்களுக்கு மேலாக இந்த காதல் தொடர்ந்ததாகவும், கொல்லப்பட்டவரின் கல்விக்கான பணத்தையும் அந்த இளைஞனே கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனை ஆசிரியை அண்மைக்காலமாக தவிர்க்க ஆரம்பித்ததில் இருந்து இருவருக்கும் இடையில் சில மனக்கசப்புகள் மற்றும் சண்டைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.