இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா

Date:

ஹலிதா ஷமீம் இயக்கி வரும் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதனை ஹலிதா ஷமீம் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015 ஆம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ’எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியுள்ளார். இந்த சூழலில் ‘மின்மினி’ படத்துக்கு கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதை ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்