26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இந்தியா

தமிழ் நடிகையின் கர்ப்பத்துக்கு யார் காரணம்?; கள்ளக்காதலனான பூசாரிக்கு வந்த சந்தேகத்தால் கொலை: சமூக சேவையாக உடலை மறைத்த கில்லாடி!

தமிழ் திரைப்படமொன்றில் நடித்திருந்த அப்சரா கள்ளக்காதலனான பூசாரியால் கொல்லப்பட்டு, சூட்சுமான முறையில் உடல் மறைக்கப்பட்ட விவகாரம் ஒரு த்ரில்லர் வெப் சீரிசுக்குண்டான அத்தனை அம்சங்களுடனும் தினம் தினம் புது திருப்பம் எடுத்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கட்டிட ஒப்பந்தக்காரராகவும் இருக்கிறார்.

இவருக்கு 2010 இல் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதுர். மனைவியுடன் தற்போது உறவில்லை.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர் அப்சரா (30). தந்தை காசி ஆச்சிரமத்தில் வசிக்க சென்றுவிட்டதால், 2022 இல் ரூர்நகர் வெங்கடேஸ்வரகாலனி ரோடு எண்.15ல் உள்ள பங்காரு மைசம்மா கோவில் அருகே வாடகை வீட்டில் தாயாருடன், அப்சரா தங்கியுள்ளார்.

பட்டப்படிப்பை முடித்த பின் சினிமத்துறையிலும் சில காலம் பணியாற்றினார். ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

அப்சரா வீட்டுக்கு அரகிலுள்ள பங்காரு மைசம்மா கோயிலுக்கு செல்வது வழக்கம்.  அந்த கோயிலில் சாயி பூசாரியாக இருந்தார்.  இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விரைவிலேயே அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமாகினர்.

சாயி அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். கோயிலுக்கு செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள், காரில் அப்சராவையும் ஏற்றிச் செல்வார். பூசாரியென்பதால் அப்சராவின் தாயும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

சாய்க்கு திருமணமாகி பிள்ளைகள் இருப்பது அப்சராவுக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது. 2023 மார்ச் முதல், தன்னை திருமணம் செய்யுமாறு சாயை, அப்சரா வற்புறுத்தி வந்தார்.

ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், அப்சராவின் வற்புறுத்தல் அதிகரிக்கவே, அவரை கொல்ல தீர்மானித்தார்.

இம்மாதம் 3ஆம் திகதி தமிழகத்தின் கோயம்புத்தூர் செல்லாமென கூறி, அப்சராவை தனது காரில் அழைத்து வந்துள்ளார். இரவு 8.15 மணியளவில் சரூர் நகரிலிருந்து புறப்பட்டனர்.

மறுநாள் அதிகாலை 3.50 மணிளவில் ஷம்ஷாபாத் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்சரா ஏற்கனவே காரின் முன் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, காரை நிறுத்தி விட்டு, பின் ஷீட்டுக்கு சென்ற சாய், காரை மூடும் கவரை பயன்படுத்தி, அப்சராவின் முகத்தை மூடி, கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். அப்சரா திமிர, ஏற்கெனவே காரின் பின் ஷீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கல்லால் தலையில் அடித்தார். இதில் அப்சரா தலையில் 10 முறை அடிபட்டு இறந்தார்.

சடலத்தை  அந்த கவரிங் ஷீட்டினாலேயே சுற்றி, கார் பின் டிக்கிக்குள் வைத்தார்.

4ஆம் திகதி அதிகாரை 4.45 அளவில் சடலத்துடன் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்.

அப்சராவின் தாய் வீட்டிற்கு காலையில் சென்ற சாய்கிருஷ்ணா, அப்சரா தனது தோழிகளுடன் பத்ராசலம் சென்றதாக கூறினார். பின்னர் அப்சராவின் இருப்பிடம் தெரியவில்லை என்றும், போலீசில் புகார் செய்வதாகவும் கூறிவிட்டு, இம்மாதம் 5ம் திகதி அப்சராவின் தாயருடன் ஆர்ஜிஐஏ காவல் நிலையம் சென்றுள்ளார். அப்சராவை தனது மருமகள் என்று குறிப்பிட்டார்.

பத்ராசலம் செல்வதாக கூறிய அப்சராவை, தனது சொந்த காரில் ஷாம்ஷாபாத் அழைத்து வந்து அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள தோழியின் காரில் ஏற்றி விட்டதாகவும், அடுத்த நாளிலிருந்து தன் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றார்.

5ம் திகதி மாலை வரை சாய்கிருஷ்ணாவின் காரில் அப்சராவின் சடலம் இருந்தது. துர்நாற்றம் வீசியதையடுத்து, இரவு காரை எடுத்துக்கொண்டு சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் பின்புறம் உள்ள வெறிச்சோடிய பகுதிக்கு சென்றார். அங்கு பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியில் சடலத்தை வீசி அதன் மீது சுமார் 2 உப்பு மூட்டைகளை கொட்டினார்.

மறுநாள் காலை 2 டிப்பர்களில் செம்மண் கொண்டு வந்து கழிவுநீர் தொட்டியில் கொட்டினார்.

அப்சராவின் கைப்பை மற்றும் சாமான்களை எரித்தார். வீட்டுக்குச் சென்று காரை சுத்தம் செய்து மறைத்து விட்டார்.

7ம் திகதி, சாய்கிருஷ்ணா மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, ​​கழிவுநீர் தொட்டியின் இரண்டு துளைகளில் இருந்து துர்நாற்றம் வீசியதை கவனித்தார். புதிய மூடிகள் வாங்கி வந்து, கொங்கிரீட் இட்டு மூடினார்.

அத்துடன், அருகில் ஆழ்துளை கிணறு தோண்டினார். அந்த பகுதிலுள்ள அரச அலுவலகங்களின் சுற்றுப்புறங்களை சீரமைத்தார்.

இந்த பகுதியில் மக்கள் குடியிருந்தனர். அவர்களுக்கு சந்தேகம் வராமலிருக்க, சமூக சேவையாக அந்த பகுதியை சீரமைப்பதாக குறிப்பிட்டே உடலை மறைக்க இவ்வளவு நாடகங்களும் ஆடியுள்ளார்.

போலீசார் காணாமல் போன வழக்கு பதிவு செய்து, அப்சராவை கண்டுபிடிக்கும் முயற்சியை தொடங்கினர். ஷம்ஷாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவான சிசி கமராக்களின் காட்சிகள், அப்சரா மற்றும் சாய்கிருஷ்ணா போன்களின் டவர் இடங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அம்பேத்கர் சிலையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், அப்சரா ஷாபாத் சாலை வழியாக சாய்கிருஷ்ணாவின் காரில் நர்குடா நோக்கி செல்வது தெரிந்தது.

இதனால் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சாய்கிருஷ்ணாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய  விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வெள்ளிக்கிழமை,  போலீசார் கழிவுநீர் தொட்டியை உடைத்து, அழுகிய நிலையில் அப்சராவின் சடலத்தை மீட்டனர்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா வற்புறுத்தியதால் தான் கொலை செய்ததாக சாய்கிருஷ்ணா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

அப்சரா கடந்த சில மாங்களின் முன்னர் கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் சாயை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்சராவின் கர்ப்பத்துக்கு தான் காரணமில்லை, அப்சரா வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என சாய் தீவிரமாக நம்பியுள்ளார்.

சென்னைக்கு சென்று அங்குள்ள காதலனுடன் உடலுறவு கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் நம்பியுள்ளார்.

அப்சரா ஜனவரி மாதம் 3 மாத கர்ப்பமாக இருந்நததாகவும், ஏற்கெனவே சில முறை கருக்கலைப்பு செய்துள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் சாய் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அப்சராவுடன் தான் உறவு கொள்ளவில்லையென்றும், தன்னால் கர்ப்பமானதாகவும் இரண்டு வெவ்வேறு முரண்பட்ட வாக்குமூலங்களை சாய் வழங்கியுள்ளார்.

அப்சரா, கர்ப்பத்துக்கு காரணம் சாய்தான் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து விடுவேன் என்றும், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் சாய் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அப்சரா ஏற்கெனவே திருமணமானவர் என சாயின் உறவினர்கள் தற்போது புதிய தகவலொன்றை வெளியிட்டு, புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் பொலிசார் தரப்பில் இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment