நிர்வாகத்தினால் எடுக்கப்படும் சில கொள்கைத் தீர்மானங்களை தாம் ஏற்றுக்கொள்ளாததால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது நாமல் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் ஒரு இலாகாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தேர்தலுக்கு அண்மையாக அறிவிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டமை எவ்வாறு எதிர்பாராததோ அதேபோன்று அது நடந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும் என்றும் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1