நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மேகா ஆகாஷ் நல்ல அழகிருந்தாலும், பெரிய வெற்றிப்படம் கிடைக்காமல் தவிப்பவர். ஆனாலும், பிஸியான நடிகை. தமிழ், இந்தி,தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல அரசியல்வாதியொருவரின் மகனை மேகா ஆகாஷ் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியல்வாதியின் மகனுடன் காதல் உறவில் சில காலமாக இருந்து வருவதாகவும், அதிகாரபூர்வமாக மாறும் தருணத்தில் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.