மும்பையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டிச் சமைத்து, நாய்களுக்கு உணவாக்கியது எப்படி என்பது குறித்து குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதால், தான் இறந்த பின் அந்த பெண் எப்படி வாழ்வார் என்ற அச்சத்தில் இந்த கொலையை செய்ததாகவும், 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதும் ஒருமுறை கூட அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை, மீராபயந்தரிலுள்ள கீதா நகரில் இருக்கும் ஆகாஷ்தீப் என்ற கட்டடத்தின் 704வது அறையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்குத் தங்கியிருந்தவர் மனோஜ் (56). இவருடன் சரஸ்வதி வைத்யா என்ற பெண் திருமணம் செய்துகொள்ளமல் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
சரஸ்வதியும் மனோஜும் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும், பக்கத்து வீட்டில் யாருடனும் அதிகமாகப் பேசிக்கொண்டது கிடையாது. அதனால் அவர்களது வீட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில், திடீரென அவர்களது வீட்டிலிருந்து கெட்ட வாசனை வந்திருக்கிறது. இரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் மனோஜ் வீட்டுக்கு வந்தபோது மனோஜ் வீட்டில் இருக்கவில்லை. பொலிசார் அங்கு காத்திருந்த போது, மனோஜ் வந்தார். போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். ஆனால், போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர்.
அவரிடமிருந்த பையில் மாமிசங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் வசித்த வீட்டை சோதனை செய்தபோது, உள்ளே 3 வாளிகளில் இரத்தம் நிரம்பியிருந்தது. அவற்றில் மனித மாசிச துண்டுகள் காணப்பட்டன. சமையலறை தொட்டி, குக்கர் மற்றும் பாத்திரங்களில் மனித மாமிசம் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கணக்கிட முடியாதளவு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த சரஸ்வதி வைத்யா என்பவரது மாமிசங்களையே வெட்டியுள்ளார்.
கைதான மனோஜ் சானே முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில், யூன் 3ஆம் திகதி சரஸ்வதி விசம் அருந்தி உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி வெளியில் சென்றுவிட்டு தாமதமாக வரும் போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதும், சரஸ்வதி யாருடனோ தொடர்பில் இருக்கிறார் என்று மனோஜ் நம்பியதும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று தகராறை தொடர்ந்து சரஸ்வதி விசம் அருந்தி உயிரிழந்ததாக மனோஜ் கூறுகிறார். படுக்கையில் சரஸ்வதியின் சடலத்தை கண்டதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தன் மீது குற்றம்சாட்டப்படலாமென பயந்து உடலை மறைக்க முடிவெடுத்ததாகவும் கூறினார்.
சில வாரங்களின் முன்னர் டில்லியில் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணை காதலன் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி அகற்றிய செய்தியை படித்த பின்னர், அதேபோல சரஸ்வதியின் உடலையும் அகற்ற மனோஜ் தீர்மானித்துள்ளார்.
விசாரணையில் மற்றொரு தகவலையும் மனோஜ் வெளியிட்டுள்ளார். தனக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதென்றும், சரஸ்வதி தனது மகளை போல இருந்ததால் அவருடன் ஒருபோதும் உடலுறவு வைத்திருக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
32 வயதான சரஸ்வதி 10ஆம் வகுப்பு எஸ்எஸ்சி தேர்வில் தோற்ற திட்டமிட்டுள்ளதாகவும், தானே அவருக்கு கணிதம் கற்பித்ததாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார். வீட்டு சுவரில் கணித சமன்பாடுகள் எழுதப்பட்டுள்ளதையும் பொலிசார் கண்டறிந்தனர்.
சரஸ்வதியும் தானும் 13 வருடங்களாக தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் 2010ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். அகமது நகரை சேர்ந்த சரஸ்வதி பெற்றோர் இல்லாதவர். அந்த பகுதியில் அநாதையாக சுற்றித்திரிந்தவர். மனோஜ் அந்த பகுதியிலுள்ள ரேஷன் அலுவலகத்தில் பணிபுரிந்தார். ரேஷன் அலுவலகத்துக்கு சரஸ்வதி சென்றபோது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் மனோஜ் தனது வீட்டுக்கு உதவியாளராக சரஸ்வதியை அழைத்துச் சென்றார்.
சரஸ்வதியின் உடலை 3 துண்டுகளாக வெட்டி, அதை மேலும் சிறிய துண்டுகளாக்கி எலும்பை பிரித்தெடுத்துள்ளார்.
ஜூன் 4 முதல், பிரஷர் குக்கரில் உடல் உறுப்புகளை வேகவைத்து, எரிவாயுவில் வறுத்து, அவித்து நள்ளிரவில் தண்டவாளத்தின் அருகே நாய்களுக்கு அவற்றை உணவாக வீசினார். வெட்டிய மாமிசத்தை அப்படியே வீசினால் நாய் சாப்பிடாமல் விட்டு சிக்கிக் கொள்ளலாமென்பதால் இந்த ஏற்பாடு
மனோஜ் தற்போது வளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.