அனைத்து அரச நிறுவனங்களும் அரச கட்டிடங்களில் மாத்திரம் நிறுவப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (9) பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்தார்.
அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தினாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த விஜேசிறி, ஆடம்பரமான கட்டிடங்களில் அதிக வாடகை கொடுத்து சில அமைச்சுக்கள் அடிக்கடி அலுவலகங்களை நடத்துவதாகத் தெரிவித்தார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாதாந்தம் 13 இலட்சம், தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 இலட்சம், கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 இலட்சம், மின்சார சபை நகர அலுவலகத்திற்கு மாதம் 20 இலட்சம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டிடத்திற்கு மாதாந்தம் 20 இலட்சம் செலவிடப்படுவதாக சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.