சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அரச நிதிக்குழுவின் தலைவரே அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குழுக்கள் மற்றும் ஆலோசனைச் சபைகளின் விதிகள் குறித்து அந்த சபைகளில் கூடும் எம்.பி.க்கள் கலந்துரையாடுவதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 01 இல் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொது நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்கவும் ஜனாதிபதி முன்மொழிந்தார்.



