தாயின் வர்த்தக நிலையத்திலிருந்து லொறி, 648 எரிவாயு சிலிண்டர்கள் திருடிய மகன் கைது!

Date:

648 எரிவாயு சிலிண்டர்களுடன் லேலண்ட் ரக லொறியை திருடிய நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் பெண் ஒருவரால் எரிவாயு முகவர் நிலையம் நடத்தப்படுகிறது . குறித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த சந்தேக நபர் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் லொறியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“விசாரணையின் போது, சந்தேக நபரான அவரது மூத்த மகன் கைது செய்யப்பட்டார், மேலும் எரிவாயு சிலிண்டருடன் லொறியும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சொத்துரிமை தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது தாயின் வியாபாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் லொறியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா தலைவர்கள் சந்திப்பு

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின்...

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்