28.3 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

மருதங்கேணி சம்பவம்…பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி முன்னணி உறுப்பினருக்கு விளக்கமறியல்: சட்டத்தரணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றம் சாட்டினார்.

கடந்த 03ஆம் திகதி வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது சர்ச்சை ஏற்பட்டது. அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவியபோது அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.

சம்பவ இடத்துக்கு வந்த மருதங்கேணி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரண்டு உத்தியோகத்தர்களுக்கும் தண்டனை இடமாற்றம் வழங்குவதாக குறிப்பிட்டதாக கஜேந்திரகுமார் எம்.பி தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் இன்று அதிகாலை மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட 10 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என்று வைத்த விவாதத்தின் அடிப்படையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

குறித்த விடம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணி உறுப்பினர் தரப்பில் மன்றில் முன்னிலையான  சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன் ஊடகங்களிற்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வாய் திறக்கவே அச்சப்படும் யாழ் ஜேவிபி எம்.பிக்கள்… மட்டக்களப்பு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்: சாணக்கியன் எம்.பி

Pagetamil

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Pagetamil

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!