வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நாளை (5) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ்மா அதிபரிடம் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
மருதங்கேணியிலுள்ள பொது விளையாட்டரங்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விளையாட்டு கழகத்துடன் நடத்திய கலந்துரையாடலை கண்காணிக்க சிவில் உடையில் வந்த புலனாய்வாளர்கள் தமது அடையாளத்தை உறுதி செய்ய மறுத்து தப்பியோட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சிவிலுடையிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுத்தல் விடுத்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.