25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

இன்றைய வானிலை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

Leave a Comment