25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இந்தியா

யாருமற்ற நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்து உடலுறவு: நேரில் கண்ட தாயாரை கொன்ற மகள்!

இளம் பெண்ணொருவர் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்து, படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த தாயார், இருவரையும் ஏடாகூடமான நிலைமையில் கண்டுள்ளார்.

இதை தொடர்ந்து கொலை நிகழ்ந்தது.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள இவ்நகர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு தக்ஷா பமானியா என்ற பெண் வசித்து வந்தார். இவருக்கு மீனாட்சி (19) என்ற மகள் உள்ளார். இந்த இளம்பெண் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

மீனாட்சி தனது பெற்றோருக்கு தெரியாமல் உள்ளூர் இளைஞருடன் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பு என்ற பெயரில் வெளியில் சென்று காதலனுடன் பழகுவது வழக்கம்.

சமீபகாலமாக, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் காதலனை அழைத்து உல்லாசமாக இருந்து வந்தார்.

கடந்த வாரமும் காதலனை இரகசியமாக வீட்டுக்கு அழைத்து படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார். வெளியில் சென்றிருந்த தாயார் எதிர்பாராத விதமாக திடீரென வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். படுக்கையறைக்குள் மகளும், இளைஞன் ஒருவரும் உடலுறவில் ஈடுபடுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தாயார் சத்தமிட்டதையடுத்து, மீனாட்சியின் காதலர் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

தாயார் மகளை திட்டியதுடன், அப்பா வந்ததும் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவிடம் விடயத்தை சொல்ல வேண்டாமென மகள் கெஞ்சினார். ஆனால் தாயார் சம்மதிக்கவில்லை.

அப்பாவிடம் விடயத்தை சொன்னால் விபரீதமாகி விடும் என நினைத்த அஞ்சலி, தனது தாயாரை கொலை செய்ய முடிவெடுத்தார்.

வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, தாயாரை சரமாரியாக குத்திக் கொன்றார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று உறங்குவதை போல நடித்தார்.

மாலையில் மீனாட்சி தந்தை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது மனைவி தக்ஷா பாமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், சம்பவத்தன்று   மகள் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார்அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன், யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்று பதிலளித்தார். ஆனால், அந்த இளம்பெண்ணின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

அவரிடம் அவர்கள் பாணியில் விசாரித்தபோது, ​​தாயாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

காதலனுடன் வீட்டில் உடலுறவு கொண்டதை அம்மா பார்த்ததாகவும், அம்மா அதை அப்பாவிடம் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் கொலை செய்ததாகவும் மகள் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment