வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்டை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது குறித்த பெண்ணிடம் இருந்து அட்டையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டையின் மூலம் 1,308,899 ரூபா பெறுமதியான நகைகள் கொள்வனவு செய்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 செயின் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1