வெளிநாட்டு கப்பல் கப்டன் கடலில் விழுந்து உயிரிழப்பு!

Date:

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அபுதாபி அரசுக்கு சொந்தமான ‘சீ பரோட்’ என்ற கப்பலின் பிரதம பொறியியலாளர் கப்பலில் இருந்து கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 62 வயதான Alekseje Vitalij என்பவரே உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் இந்த கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

கப்பலின் தலைமைப் பொறியாளர் நேற்று காலை மேல்தளத்தில் ஏதோ பணியில் ஈடுபட்டிருந்தபோது கடலில் விழுந்தார். கடலில் விழுந்த பொறியியலாளரை கப்பலின் ஊழியர்கள் மீட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்