திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் மதுப் போத்தல்: தாய்மாமன் அளித்த பரிசால் சர்ச்சை

Date:

சென்னையில் அண்மையில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுவையில் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய்,பழம், வெற்றிலை பாக்குடன் குவாட்டர் அளவு மது போத்தலையும் சேர்த்து கொடுத்தனர்.

இதுபற்றி பெண்ணின் தாய்மாமா கூறுகையில், “உறவினர்களும், சென்னையில் இருந்து வந்தோரும் விளையாட்டாக கேட்டதால், வித்தியாசமாக மதுப் போத்தல் தர முடிவு எடுத்தேன். ஆண்களுக்கு தாம்பூல பை தரும்போது அதில் மது போத்தலையும் சேர்த்து தந்தோம். பெண்களுக்கு வழக்கமான தாம்பூல பை தந்தோம். இதற்கு வேறு ஏதும் காரணமில்லை. தாய்மாமனாக உறவினர்களுக்காகதான் மதுப் போத்தல் தந்தேன்” என்றார்.

இது, பல்வேறு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தனது ட்விட்டர் பதிவில் ” இது அநாகரீகத்தின் உச்ச கட்டம், கலாச்சார சீர்கேடு, பண்பாட்டு சீரழிவு. உடனடியாக தொடர்புடையவர்கள் மீது புதுவை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்