26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

உக்ரைனின் கடைசிப் போர்க்கப்பலையும் அழித்தது ரஷ்யா

உக்ரைனின் கடைசி போர்க்கப்பலை அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

யூரி ஓலெஃபிரென்கோ என்ற போர்க்கப்பல் ரஷ்ய விமானப் படைகளால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது ஒடெசா துறைமுகத்தில் தரித்து நின்ற உக்ரைனிய கடற்படையின் கடைசி போர்க்கப்பலாகும். ஒடெசா மிகப்பெரிய உக்ரேனிய துறைமுகkாகும். கருங்கடல் படுகையில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

“மே 29 அன்று, ஒடெசா துறைமுகத்தில் தரித்து நின்ற உக்ரைனிய கடற்படையின் கடைசி போர்க்கப்பலான ‘யூரி ஓலெஃபிரென்கோ’, ரஷ்ய விமானப்படையின் உயர் துல்லியமான தாக்குதல் அழிக்கப்பட்டது” என்று ரஷ்ய இராணுவம் தனது தினசரி மாநாட்டில் தெரிவித்துள்ளது.

1970களில் முதன்முதலில் இயக்கப்பட்ட சோவியத் கால கடற்படைக் கப்பல் இது. ரஷ்யாவின் தாக்குதல் தகவல் தொடர்பில் உக்ரைன்  எதிர்வினையாற்றவில்லை.

கிழக்கு உக்ரைனில் டான்பாஸில் 2014 இல் தொடங்கிய நடந்த போரில் இறந்த உக்ரைனிய கடற்படையின் நினைவாக இந்த கப்பல் பெயரிடப்பட்டது. ரஷ்யாவின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றியபோது இந்த மோதல் வெடித்தது.

முன்னதாக திங்களன்று, ரஷ்யா நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்களால் ஒடெசா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரைன் அறிவித்தது.

ஒடேசா துறைமுகம் ஒரு முக்கிய தானிய ஏற்றுமதி மையமாகவும். ஐ.நா, துருக்கி மத்தியஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட தானிய ஒப்பந்தத்தின் படி, தானிய ஏற்றுமதியின் முக்கிய அங்கமாக ஒடெசா துறைமுகமே உள்ளது.

ஒடெசா துறைமுகம் ஒரு கடற்படை தளத்தையும் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

Leave a Comment