26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் முயற்சி தோல்வி!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. எனினும், இந்த முயற்சி வெற்றியடையவில்லை. அனைத்து ட்ரோன்களும் ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் சுடப்பட்டன.

எவ்வாறாயினும், உக்ரைனில் தொடரும் 15 மாத கால போர் ரஷ்ய தலைநகரின் மையத்திற்கு வந்துள்ளது.

ரஷ்யாவிற்குள் ஆழமான ட்ரோன் தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளன, எண்ணெய் குழாய்கள் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் கிரெம்ளினில் கூட உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இன்றைய ட்ரோன் தாக்குதல்கள் லெனின்ஸ்கி ப்ராஸ்பெக்ட், ஜோசப் ஸ்டாலினின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அவென்யூ மற்றும் ரஷ்ய உயரடுக்கினர் – ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட – வசிக்கும் குடியிருப்புகளைக் கொண்ட மேற்கு மொஸ்கோவை உள்ளடக்கிய பகுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது.

தென்மேற்கு மாஸ்கோவில் வசிப்பவர்கள், சுமார் 0200 முதல் 0300 GMT வரை பலத்த இடி சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெட்ரோல் வாசனை வந்ததாகவும் கூறினார்கள். சிலர் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதையும், மொஸ்கோ வானத்தில் புகை மூட்டம் எழுவதையும் படம் பிடித்தனர்.

“இன்று காலை, மொஸ்கோ நகரில் உள்ள வளாகத்தில் கியேவ் ஆட்சி ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது” என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“எட்டு ஆளில்லா வான்வழி விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன. அனைத்து எதிரி ட்ரோன்களும் தாக்கப்பட்டன.

மூன்று உக்ரேனிய ட்ரோன்களைத் திசைதிருப்ப சிறப்பு மின்னணு எதிர்-ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மேலும் ஐந்து சுட்டு வீழ்த்தப்பட்டது“ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், அதிகாலை தாக்குதலில் இருவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மொஸ்கோவின் விமான நிலையங்கள் திறந்தே இருந்தன. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோல்யாக், மொஸ்கோ தாக்குதலில் கியேவ் நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை என்று மறுத்தார், ஆனால் உக்ரைன் நிகழ்வுகளைப் பார்த்து மகிழ்வதாகவும்.

இந்த மாத தொடக்கத்தில் கிரெம்ளின் மீதான ட்ரோன் தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இல்லை என்று உக்ரைன் மறுத்தது. இருப்பினும் அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உக்ரைன் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மொஸ்கோ மீதான தாக்குதலுக்கு புடின் எவ்வாறு பதிலளிப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ட்ரோன் தாக்குதல் உக்ரைன் போரை உலகின் மிகப்பெரிய அணுசக்தியின் தலைநகருக்கு கொண்டு வருகிறது.

இன்றைய தாக்குதலில் மொஸ்கோவின் லெனின்ஸ்கி ப்ரோஸ்பெக்ட் மற்றும் வ்னுகோவோ விமான நிலையத்திற்கு அருகில் சேதம் ஏற்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சுயாதீன தகவல்களின்படி 25 வரையான ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. அவை வானத்திலேயே அழைக்கப்பட்டன. சிதைவுகள் சில கட்டிடங்களில் மோதியுள்ளன. வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து தப்பித்த உக்ரைன் ட்ரோன் ஒன்று கட்டிடடத்தை தாக்கிய போதும், அது வெடிக்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment