யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் சிறு வர்த்தகம் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று (29) நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்.
அவர் உயிரை மாய்த்த சமயத்தில் அவரை தேடி வீட்டிற்கு வெளியில் கடன் கொடுத்தவர்கள் சிலர் காத்து நின்றதாகவும், வர்த்தகர் உயிரை மாய்த்ததையறிந்து வீட்டிலிருந்து அழுகுரல்கள் கேட்டதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நழுவிச் சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களின் முன்னரும் கடன்கொடுத்தவர்கள் மரக்காலைக்கு சென்று தலைக்கவசத்தால் வர்த்தகரை தாக்கியுள்ளனர்.
கடன் தொல்லையால் வர்த்தகர் ஏற்கெனவே ஒருமுறை தனது மரக்காலைக்குள் உயிரை மாய்க்க முயன்றபோது, மரக்காலையில் பணியாற்றியவர்கள் தலையிட்டு அவரை சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.