ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பாணந்துறை பின்வத்தை இல்லத்திற்குள் இன்று (30) பிற்பகல் நுழைய முயன்ற நபரை பின்வத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் வீட்டின் சுவரில் இருந்து குதித்து தோட்டத்திற்குள் நுழைந்தபோது, அதன் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைப் பிடித்தார். சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் பின்வத்தை பொலிஸாருக்கு அறிவித்ததன் பிரகாரம் பொலிஸ் குழுவொன்று வந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வெறிச்சோடிய வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் காலி பகுதியைச் சேர்ந்த (25) வயதுடையவர் எனவும், அவர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் திருட வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் நாளை (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.