தம்புத்தேகம பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றில் பட்டாசு கொளுத்த முயற்சித்த இளைஞன் ஒருவர் திடீரென கையில் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
லக்மால் ஜயதிலக்க என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரியாத பட்டாசு ஒன்றை பரிசோதித்து கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்து இளைஞன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இளைஞன் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1