திருகோணமலை கடற்படை அருங்காட்சியகத்தில் உள்ள பழைய பாய்மரப் படகு மாதிரி ஒன்று நேற்று (28) பிற்பகல் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்படை அருங்காட்சியகத்திற்கு சென்ற நபர் ஒருவரல் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாய்மரக் கப்பல் மாதிரியின் பாய்மரப் பகுதிக்கு மட்டுமே தீயினால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அருங்காட்சியகத்தில் கண்காணிப்பு கமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ள போதிலும் இநத சம்பவம் பதிவாகவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1