ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி மூலம் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆனார். இப்போது அவர் கைவசம் பல மொழி இந்திய திரைப்படங்கள் உள்ளன. பிரபாஸின் ஆதிபுருஷ் 16 ஜூன் 2023 அன்று வெளியாகிறது. சலார், ப்ராஜெக்ட் கே, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் கிரேஸி படங்கள் வரிசையாக உள்ளன.
ஆதிபுருஷ் படத்தில் ராமனாக நடிக்கிறார். ஆனால் பிரபாஸ் ஒரு காலத்தில் மேற்சட்டையைக் கழற்றிவிட்டு சினிமாவில் நடிக்கவே பயந்தார். மேற் சட்டை அணியாமல் தைரியமாக ஒரு காட்சிக்கு செல்லவே மறுத்தவர் என்பது பலருக்குத் தெரியாது.
பிரபுதேவா இயக்கிய தெலுங்குப் படமான பௌர்ணமி படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இந்த படத்தில் பிரபாஸூடன் நடிகைகள் சார்மி மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். இதில் பிரபாஸும் த்ரிஷாவும் நெருங்கி பழகும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் பிரபாஸும் த்ரிஷாவும் காதலித்து வந்தனர். பிரபாஸ் மேற்சட்டை இல்லாதது போல் இருக்க வேண்டும்.
இயக்குநர் பிரபாஸை சட்டையைக் கழற்றச் சொன்னபோது, பிரபாஸ் மறுத்து விட்டார். சட்டை இல்லாமல் நடிக்க தனக்கு வெட்கம் என்றும், எடிட்டிங்கில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
எடிட்டிங் செய்த பிறகு அந்த காட்சி இயல்பாக இல்லை என்று இயக்குனர் பிரபுதேவா கருதினார். அதை பிரபாஸிடமும் கூறினார். ஆனால் பிரபாஸ் கேட்கவில்லை.
இதனால் அப்செட்டான பிரபுதேவா படப்பிடிப்பை மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்தார். பின்னர், கிருஷ்ணம்ராஜூதான் தலையிட்ட, பிரபாஸை சமரசப்படுத்தி, நடிப்பு பற்றி குறிப்பி்டு, படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்தார்.
அப்போதும் இந்தக் காட்சியை படமாக்க பிரபாஸ் நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
ராதே ஷியாமில் கூட, பூஜா ஹெக்டே உடனான நெருக்கமான காட்சிகளில் பிரபாஸ் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டார்.