24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

இளவாலை வடக்கு கமக்காரர் அமைப்பின் பிரச்சினைகளை ஆராய்ந்த த.சித்தார்த்தன் எம்.பி

யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவாசயிகளை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது இப்பகுதி தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதால் எமது பிரதேசத்தில் கொடி முந்திரிகை செய்கையில் ஈடுபடும் அதிகளவான விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு நீர் உறிஞ்சும் கம்பனியையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்தோடு 200 மேற்பட்ட கொடி முந்திரிகை செய்கையாளர்கள் ஏனைய செய்கையாளர்கள் பாதிப்படைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.

இதன் பின்னர் இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மேட்டுநில செய்கையாளர்களுக்கு உரம் மானியமாக வழங்கப்படுவிதில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை உரிய அமைச்சருடன் பேசி முடிவு எடுத்து தருவதாகவும் கருத்து கூறினார்.

கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், இளவாலை வடக்கு விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!

east tamil

Leave a Comment