25.4 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

பலாப்பழ பேரத்தில் விபரீதம்: 50 ரூபாவிற்காக நடந்த கொலை!

ரத்மலானை, கல்லுபர பிரதேசத்தில் பேக்கரி உரிமையாளரை கத்தியால் குத்திய கொலையாளியை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (22) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஹபுகஸ்தலாவ, அஹஸ்வெவ வீதியைச் சேர்ந்த மொஹமட் பாயிஸ் என்ற 29 வயதுடைய பேக்கரி உரிமையாளரே உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பேக்கரி உரிமையாளர் கொழும்பு களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் உரிமையாளர் சந்தேக நபரிடம் பலாப்பழம் கொண்டு வரச் சொல்லியுள்ளார். அதன் பிரகாரம் சந்தேகநபர், பலாப்பழம் ஒன்றை கொண்டு வந்துள்ளார், அதற்காக 250 ரூபாவை தருமாறு கூறியுள்ளார்.

ஆனால் பேக்கரி உரிமையாளர் சம்மதிக்கவில்லை. பலாப்பழத்தை, 200 ரூபாய்க்கு தரும்படி கூறினார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ​​பேக்கரி உரிமையாளர், பேக்கரிக்குள் சென்று கத்தியை எடுத்து வந்தார். இதனால் கோபமடைந்த சந்தேகநபர், பேக்கரி உரிமையாளரிடமிருந்த  ​​கத்தியை பறித்து, அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!