வீதியில் கண்டெடுத்த 4 இலட்சம் ரூபாய் பணத்தை பொலிசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மதியம் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கு முன்னால் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணத்தை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எம்.மொய்னுல்ஹக் என்ற இளைஞர் கண்டெடுத்துள்ளர்.
அவருடன் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வதீபன் என்ற முச்சக்கர வண்டி சாரதியும் இருந்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட பணத்தை காத்தான்குடி பொலிஸ் நிலைய போதையொழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நணயசிறி பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
கடைக்காரார் ஒருவர் சீனி கொள்வனவிற்காகக் கொடுத்த மேற்படி பணத்தை சாதாரண லொறிச் சாரதியான நபர் கொண்டு வரும்போதே காணாமல் கோயுள்ளது. பணத்தைத் தொலைத்த நபர் மிகுந்த நன்றி உணர்வுடன் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.எம்.றஹீம் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.