வீதிகள், பாலங்கள் என்பன வெளிநாட்டு நிதியுதவியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் வரை நிதியுதவிகள் கிடைக்காததால் அபிவிருத்திப் பணிகள் நடக்காது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே இதனை தெரிவித்தார்.
ஒப்பந்தக்கார்களுக்கு 87 பில்லியன் வழங்க வேண்டும். தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணத்தை சீனாவின் எக்சிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. அந்த அபிவிருத்தியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் 150 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. இனிமேலும் தம்மால் செலவிட முடியாதென அறிவித்துள்ளனர்.
நாங்கள் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வரை வெளிநாட்டு கடன் உதவியாளர்கள் பணம் தரமாட்டார்கள். நாங்கள் நடுவீதியில் படுத்திருந்தாலும் அவர்கள் பணம் தரமாட்டார்கள் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1