27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
கிழக்கு

நிந்தவூரில் பழக்கடைகளில் சோதனை

பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து பழக்கடைகளிலும் பரிசோதனை நடவடிக்கை திங்கட்கிழமை மேற் கொள்ளப்பட்டது.

இதில் மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்டன.

இவ்வாறு பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் இரசாயன தாக்கதின் விளைவுகளை அறியாமல் அதனை உட்கொண்டு பல நோய்களுக்குள்ளாகின்றனர்.

எனவே, இதனை தடுக்கும்பொருட்டு இவ்வாறு இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் பழங்களையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துங்கள் என சுகாதார வைத்திய அதிகாரி றயீஸ் தெரிவித்தார்.

இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயீஸ், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் க்ளீன் சிறிலங்கா செயலமர்வு: அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்

east tamil

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டவர் உயிரிழப்பு

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

குகதாசன் கண்டனம்

east tamil

திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

east tamil

Leave a Comment