எல்சல்வடோரில் கால்பந்து மைதான நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

Date:

எல் சல்வடோர் நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் நாட்டின் தலைநகர் சான் சல்வடோரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் நேற்று (20) எஃப்சி அலியான்சா மற்றும் கிளப் டிபோர்டிவோ எஃப்ஏஎஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஸ்டேடியத்தில் நுழைந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பலரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.

இந்த நெரிசலில் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறுவர்கள் உள்ப்ட 90 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சால்வடோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிரான்சிஸ்கோ அலாபி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சல்வடோர் ஜனாதிபதி நயீப் புகேலே உறுதியளித்துள்ளார்.

“கால்பந்து அணிகள், மைதானத்தின் மேலாளர்கள், டிக்கெட் அலுவலகம், கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்று அவர் ருவீட் செய்துள்ளார்.

இந்தோனேசியாவின் மலாங்கில் கால்பந்து போட்டியைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 135 பேர் இறந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த சோகம் வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்