உக்ரைன் நெருக்கடியை தீர்க்க முடிந்த அனைத்தையும் செய்வோம்: மோடி!

Date:

உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க இந்தியா “எங்களால் முடிந்ததைச் செய்யும்” என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் உறுதியளித்தார்.

ஜப்பானில் ந்டக்கும் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இரு தலைவர்களும், தனியாக சந்தித்து பேசிய போது, “உங்கள் வலி மற்றும் உக்ரைன் குடிமக்களின் வலி எனக்கு நன்றாகப் புரிகிறது” என்று மோடி கூறினார்.

இதைத் தீர்க்க இந்தியாவும், நானும் தனிப்பட்ட முறையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று மோடி கூறினார்.

ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், “நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை ஆதரித்ததற்காக, குறிப்பாக சர்வதேச அமைப்புகளின் தளங்களில் இந்தியாவிற்கு நன்றி” என்று எழுதினார்.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, உக்ரைனின் அமைதி திட்டத்தில் சேர இந்தியாவை அழைத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்