தெலுங்கு நடிகர் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதை லாவண்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் மாதம் லாவண்யா திரிபாதி – வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது என்கிறார்கள். இதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
நடிகர் வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.