Pagetamil
சினிமா

சிம்புவுக்கு ஜோடியாக ரூ.30 கோடி சம்பளம் கேட்கும் தீபிகா!

சிம்புவின் புதிய படத்தில் நடிக்க தீபிகா படுகோனை நடிக்க வைக்க முயற்சிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தீபிகாவின் சம்பளத்தை கேட்டு படக்குழு அதிர்ந்து போயுள்ளதாகவும் தெரிய வருகிறது.

சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் இன்டர்நேஷனல் பேனரில் தயாரிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம், அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகா படுகோனை படக்குழுவினர் தொடர்பு கொண்டபோது எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிகிறது.

படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்க 30 கோடி ரூபாய் கேட்டுள்ளார் தீபிகா படுகோன். அதுமட்டுமின்றி, அவர் வெளியிட்ட செலவுப் பட்டியலைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் பட்டியலில் தீபிகாவுக்கு சொகுசு விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஷூட்டிங் நாட்களில் ஹோட்டலில் தரைத்தளம் முழுவதையும் முன்பதிவு செய்யச் சொல்லியுள்ளார். பயணச் செலவுகள் மற்றும் அவரது ஊழியர்களின் செலவுகள் தனிக் கணக்கு.

இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்து, புதிய நாயகியை தேடலாமா என்பது கற்றி கலந்துரையாடி வருகிறது.

பதான் படத்தில் தீபிகா படுகோனே கிளாமரின் அனைத்து எல்லைகளையும் உடைத்தெறிந்தார் என்பது தெரிந்ததே.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment