25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
சினிமா

வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி திருமணம்?

தெலுங்கு நடிகர் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதை லாவண்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் மாதம் லாவண்யா திரிபாதி – வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது என்கிறார்கள். இதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

நடிகர் வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment