சென்னையில் லைக்கா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லைக்கா நிறுவனம் தமிழில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சென்னையில், லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, சென்னை தி.நகரில் உள்ள லைக்கா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தவிர்த்து அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் சுபாஸ்கரனினால் லைக்கா நிறுவனம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.